வியாழன், 25 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 செப்டம்பர் 2025 (11:17 IST)

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை..!
சிபிஎஸ்இ  2026-ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 17 அன்று தொடங்கி, ஏப்ரல் 9 வரை நடைபெறும்.
 
10-ஆம் வகுப்பு தேர்வுகள்: பிப்ரவரி 17-இல் தொடங்கி மார்ச் 9 அன்று முடிவடையும். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். 12-ஆம் வகுப்பு தேர்வுகள்: பிப்ரவரி 17-இல் தொடங்கி ஏப்ரல் 9 அன்று முடிவடையும்.
 
10-ஆம் வகுப்பு:  பிப்ரவரி 17 முதல் ஒவ்வொரு நாளும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். 
 
12-ஆம் வகுப்பு: பிப்ரவரி 17 அன்று தொடங்கும் தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். 
 
இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அட்டவணை தற்காலிகமானது என்றும், இறுதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran