திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (10:58 IST)

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 27 மாடி கட்டிடம்! சென்னை மெட்ரோவின் மெகா பிளான்

Central railway station
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 27 மாடியில் மெகா கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதில் எட்டு மாடிகளுக்கு பார்க்கிங் வசதி இருக்கும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
1500 வாகனங்கள் 1500 டூவீலர்கள் 400 கார்கள் நிறுத்தப்படும் அளவுக்கு இந்த பார்க்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.  
 
சென்னை சென்ட்ரல் வரும் பயணிகளின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காகவும் இந்த மெகா பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  
 
மேலும் இந்த கட்டிடத்தில் வணிக வளாகங்கள் இருக்கும் என்றும்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட இருப்பதாகவும்  கூறப்படுகிறது.
 
Edited by Mahendran