திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (09:30 IST)

பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்.. ஒப்புதல் கிடைப்பது எப்போது?

சென்னையில் புறநகர் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
 
புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தெற்கு ரயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் டிக்கெட் எடுத்த 6 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம் என விதியை மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva