திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (16:51 IST)

வந்தே பாரத் ரயில்.. சென்னையில் இருந்து நெல்லை எந்தெந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்?

சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் நாளை முதல் இயங்க இருக்கும் நிலையில் இன்று முன் பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லை வரை எந்தெந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் இதோ:
 
நெல்லை - சென்னை வந்தேபாரத் ரயில் கட்டண விவரம்
 
 சென்னை  -  திருச்சி - ரூ.853.60
 
 சென்னை  - திண்டுக்கல் - ரூ.1008.60
 
 சென்னை  -  மதுரை - ரூ.1103.60
 
 சென்னை  -  விருதுநகர் - ரூ.1183.60
 
 சென்னை  -  திருநெல்வேலி - ரூ.1343.60
 
மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் உணவு இல்லாமல், அனைத்து வரிகளும் உட்பட என்பது குறிப்பிடத்தக்கது.  உணவு அல்லது டீ, காபி வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். உணவு வேண்டாம் என்றால், முன்பதிவு செய்யும்போது No food என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran