திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (15:29 IST)

புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடியில் ஒப்பந்தம்

சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு   ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி,  சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3 ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058.20 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன்  மெட்ரோ ரயில்  நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.