திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:49 IST)

சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் எழுந்து வருகிறது. இந்நிலையில் பழைய ஊழல் வழக்குகளில் திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டமிட்ட சதி என தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை காண நடிகர் பவன் கல்யாண் நேற்று இரவு சென்றபோது போலீஸார் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் நடிகர் பவன் கல்யாண் நடுரோட்டில் தர்ணா செய்து வருகிறார். இந்த சம்பவங்கள் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அதன்படி, விஜயவாடாவில், போலீஸார் சமர்பித்த ரிமாண்ட் ரிப்போர்ட் மீது தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகிறது.