சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம் விலை!.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 21) சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.91,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465 ஆக உள்ளது.
இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே நீடிக்கும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.175 ஆக உள்ளது. தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

