10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58000 சம்பளத்தில் வேலை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு...
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Level 2 பிரிவின் கீழ் வரும் இப்பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
01.07.2026 அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பொதுப்பிரிவினருக்கு 18-35, பிசி/எம்பிசி/சீர் மரபினருக்கு 18-37, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 18-40 எனவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்குச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100, எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆகும்.
இணையவழி விண்ணப்பங்கள் டிசம்பர் 4, 2026 முதல் டிசம்பர் 18, 2026 இரவு 11.59 மணி வரை [http://tnrd.tn.gov.in](http://tnrd.tn.gov.in) இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அழைப்பு ஜனவரி 5, 2027-ல் அனுப்பப்பட்டு, ஜனவரி 19 முதல் 21 வரை நேர்காணல் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜனவரி 25-லும், பணி நியமன ஆணை ஜனவரி 27, 2027-லும் வழங்கப்படும். உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வது அவசியம்.

