1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Extends Health Insurance Scheme for 5 Years with Ayushman Bharat Integration and TNMSC Inclusion

முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்துடன் இணைப்பு.. இனி மக்களுக்கு டபுள் ஜாக்பாட்...

முதல்வர் காப்பீடு திட்டம்
தமிழக மக்களின் உயிர் காக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, 11.01.2027 முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்கவும், காப்பீடு நிறுவனத்தைத் தேர்வு செய்யவும் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநில அதிகாரம் பெற்ற குழுவில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநரையும் புதிய உறுப்பினராகச் சேர்த்து அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம், நிதி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அடங்கிய இந்த 13 பேர் கொண்ட குழு, திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும்.
 
இந்த ஒருங்கிணைப்பு மூலம் தமிழகக் குடும்பங்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் தடையின்றி கிடைக்கும். பெரிய நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான இலவச மருத்துவ உதவி தொடர்ந்து கிடைப்பதால், பொதுமக்களுக்கு பெரும் நிதிப் பாதுகாப்பு உறுதியாகியுள்ளது. 
 
அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழுவில் இணைந்திருப்பது, திட்டத்தின் தரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய காப்பீடு நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான விரிவான பட்டியல் வெளியிடப்படும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ! இனி அரசு ஊழியர்கள் போலவே பணிக்கொடை...