அமைச்சர் கீர்த்தனா மீது அதிருப்தியில் விஜய்?.. அதான் லண்டனுக்கு கூட்டி போகலயா?!..
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் காரணமாக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். மேலும் விஜயின் மக்கள் இயக்கத்தில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலரும் தவெக எம்.எல்.ஏக்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களின் சிலருக்கு முதல்வர் விஜய் அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார், அவர்களில் ஒருவர்தான் கீர்த்தனா. இவருக்கு தொழில்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது..
தனக்கு தமிழ் ஆங்கிலம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகள் தெரியும் என ஊடகங்களில் பேசினார் கீர்த்தனா, ஆனால் அந்த பொறுப்புக்கு அவர் வந்தது முதலே ட்ரோலி சிக்க துவங்கினார். அவர் ஆங்கிலம் பேசும் ஸ்டைல், குழந்தைகளிடம் நடந்து கொண்ட ஒரு சம்பவம் ஆகியவை ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில்தான் கடந்த 10ம் தேதி இரவு தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஜோசப் விஜய் முதலமைச்சர் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். ஆனால் தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா அவருடன் செல்லவில்லை. மாறாக ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் கீர்த்தனாவின் பதவியை பறிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதால்தான் லண்டனுக்கு அவரை விஜய் அழைத்து செல்லவில்லை என செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே கீர்த்தனா மீது விஜய்க்கு நம்பிக்கை இல்லை என்கிற பேச்சு கட்சிக்குள் இருக்கிறது.. இப்போது லண்டனுக்கு அவரை கூட்டி செல்லாமல் இருப்பது அதை உறுதி செய்திருக்கிறது என சிலர் பேசுகிறார்கள். ஆனால், அமைச்சர் கீர்த்தனா இங்கே பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டி இருப்பதால் லண்டன் செல்லவில்லை என தவெகவினர் கூறுகிறார்கள்.