1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Refutes Rumors of 50 Percent Beneficiary Removal in Women’s Rights Scheme

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக பொய் வதந்தி.. தமிழக அரசு விளக்கம்...

money
மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட பயனாளிகளில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 
17 லட்சம் பயனாளிகளில் பாதியளவு பேரை நீக்க எந்தவொரு சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
 
மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2026 மாதத்திற்கான தொகை கடந்த 14.11.2026 அன்று மொத்தம் 1,29,97,568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறை தரவுகளின் அடிப்படையில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் மாதாந்திரப் புதுப்பித்தல் மட்டுமே நடக்கிறது.
 
முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என எந்த பாகுபாடுமின்றி அனைத்து பயனாளிகளுக்கும் இந்த சரிபார்ப்புப் பணி பொதுவானது. பயனாளிகளில் யாரேனும் உயிரிழந்திருந்தாலோ, தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாமாக முன்வந்து விலகியிருந்தாலோ மட்டுமே பட்டியலில் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, 50 சதவீதம் நீக்கம் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்பதை அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் பத்திரப்பதிவில் புதிய புரட்சி.. 3 மாதங்களில் 1,03,705 ஆவணங்கள் பதிவு.. அரசுக்கு 1357.85 கோடி ரூபாய் வருவாய்..