வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2025 (09:31 IST)

பாஜக தலைவர் கலந்து கொண்ட திருமண விழா.. திடீரென மேடை சரிந்ததால் மணமக்கள் அதிர்ச்சி..!

பாஜக தலைவர் கலந்து கொண்ட திருமண விழா.. திடீரென மேடை சரிந்ததால் மணமக்கள் அதிர்ச்சி..!
உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் பா.ஜ.க. தலைவர் அபிஷேக் சிங் இன்ஜினியரின் சகோதரர் திருமண வரவேற்பு நடந்தது. இதில், மாவட்ட பா.ஜ.க. தலைவர் சஞ்சய் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. பரத் சிங் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் உட்பட சுமார் 12 முதல் 14 பேர் மேடையில் மணமக்களை வாழ்த்த குவிந்தனர்.
 
போதுமான வலுவின்றி அமைக்கப்பட்டிருந்த ஒட்டுப்பலகை மேடையானது, பல தலைவர்களின் எடையை தாங்க முடியாமல் சில வினாடிகளுக்குள் திடீரென உடைந்து சரிந்தது. இதனால், மேடையில் இருந்த மணமக்களும் தலைவர்களும் உடைந்த பலகைகளுடன் கீழே விழுந்தனர். இந்த சம்பவம் முழுவதுமாக கேமராவில் பதிவாகி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 
அதிர்ஷ்டவசமாக, மணமக்கள் உட்பட யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என மாவட்ட பா.ஜ.க. தலைவர் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்தார். இந்த சம்பவம், திருமண வீட்டினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
 
Edited by Siva