1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. tk sivakumar talk about cauvery water issue

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

sivakumar vijay
ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை திறக்காமல் கர்நாடகா அரசு முரண்டு பிடித்து வருகிறது. அதைவைத்து கர்நாடகா அரசியல்வாதிகள் அங்கு அரசியல் செய்து வருகிறார்கள். ஏனெனில், தமிழகத்திற்கு நீரை திறந்து விட்டால் தங்களுக்கு அந்த மாநில மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அம்மாநில அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். ஒருபக்கம் மேததாது அணையை கட்டும் முயற்சியிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கர்நாடக முதலமைச்சராக உள்ள டி.கே சிவக்குமாரும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து கூறி வருகிறார்..

அதேபோல் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட முடியாது எனவும் அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். தமிழகத்திற்கு குறிப்பிட்ட டிஎம்சி நீரை திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தற்போது வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. தற்போதுள்ள தவெக அரசும் இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் ‘காவிரி நீரில் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை பெற தமிழகத்துக்கு உரிமை இருக்கிறது. காவிரி விவகாரம் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தமிழகத்தின் தேவைக்காக பயன்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.. மாநிலங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை மூலம் தீர்வை உருவாக்க கர்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...