1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. three hundred indians are missing in nepal flood

வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்!.. 300 இந்தியர்கள் மாயம்!...

nepal
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். அதில், 40க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடக்கம். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள்.

நேற்று மாலை திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உடைந்து தேங்கியிருந்த நீர் நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்தது. இதன் காரணமாக ஆற்று ஓரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதில் பல நூறு பேர் உயிரிழந்தனர். பலரும் மாயமாகிவிட்டனர்.

மேலும், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் 300 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களின் நிலை என்னவென தெரியவில்லை. நேபாளத்தில் மின்சாரம் இல்லை.அதேபோல், செல்போன் டவர்கள் சேதமானதால் யாருக்கும் சிக்னல் கிடைக்கவில்லை. எனவே, அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்தியர்கள் உட்பட மொத்தம் 466 வெளிநாட்டினர், நோயாளிகள் 113 பேர் என மொத்தமாக 579 மாயமாகியிருப்பதாக நேபாள நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரை 19 பாலங்கள், 40 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. 13 மின் திட்டங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்குங்கள்>. நீதிமன்றம் அதிரடி