1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 மே 2025 (09:05 IST)

பத்திரிகைகளில் பெயர் வரவே வக்பு விவகார மனுக்கள் தாக்கல்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..!

வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு புதிய மனுக்களை உச்சநீதிமன்றம்  நிராகரித்தது.
 
முதற்கட்டமாக, இந்த சட்டத்தின் சட்டப்பூர்வத்தன்மையை கேள்விப்பட்ட 72 மனுக்களில், ஐந்தை தேர்வு செய்து, “மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025” என்ற தலைப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால், நீதிபதிகள் அதனை விருப்பமில்லை என்று தெரிவித்தனர்.
 
இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “முக்கியமான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து இவ்வாறு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது சரியல்ல” என்றார்.
 
அவரது கருத்தை ஏற்ற நீதிபதிகள், “பலர் பத்திரிகைகளில் தங்களது பெயர் தோன்றவேண்டும் என்பதற்காகவே இப்படி மனுக்கள் தாக்கல் செய்கிறார்கள். ஏற்கனவே போதுமான மனுக்கள் விசாரணையில் உள்ளன” எனக் கூறினர்.
 
ஆகையால், புதியதாக வந்த இரண்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, அவற்றை நிராகரித்தனர்.
 
Edited by Mahendran