1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஏப்ரல் 2025 (07:34 IST)

பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் பட்டியலில் வீர மரணம் அடைந்த வீரரின் தாயார்.. அதிர்ச்சி தகவல்..!

தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீர மரணம் அடைந்த ஒருவரின் தாயார் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், அவர் நாடு கடத்தப்பட இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பெஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 60 பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்புவதற்காக ஜம்மு காஷ்மீர் அரசு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அந்த பட்டியலில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி  வீர மரணம் அடைந்ததற்கான விருது அறிவிக்கப்பட்ட காவலர் ஒருவரின் தாயார் சனா என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
மகனுக்கு அறிவிக்கப்பட்ட விருதினை குடியரசுத் தலைவரிடம் இருந்து அவரது தாயார் சமீனா பெற்ற நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படும் பகுதியை சேர்ந்தவர் தான் சமீனா என்பவரால், அவர் இந்தியாவுக்கு பாதுகாப்பற்றவர் என கருதப்பட, பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
பாகிஸ்தானில் இருந்து 20 வயதில் இந்தியா வந்த அவர், 45 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசு தனக்கு இந்தியாவிலேயே வாழ அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அவரது கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva