பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் இந்த இடத்தில், ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பயங்கரமான சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பே பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் X கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பாகிஸ்தான் அரசின் முக்கிய இணையதளமும் அண்மையில் செயலிழக்க செய்யப்பட்டது.
அமைச்சர் ஆசிப், ”இந்திய ராணுவம் விரைவில் நுழையும். நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்,” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவத்திற்கு எதிராக தவறான தகவல்கள், தீவிர கருத்துக்கள் ஆகியவற்றை பரப்பியதாக கூறி, இந்தியா 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்த பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தரின் சேனலும், முக்கிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் இடம்பெற்றுள்ளன.
Edited by Siva