1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (14:12 IST)

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

பாகிஸ்தான் பாதுகாப்பு படை அங்குள்ள 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ’இதன் மூலம் இந்தியாவை சமாதானப்படுத்த பாகிஸ்தான் நினைக்கிறதா?ʼ என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பெஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், ’இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதால், போரை தவிர்க்க பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
 
’பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம்ʼ என்றும், ’பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளதுʼ என்றும் கூறி வருகிறது.
 
இந்த நிலையில் தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் 10 பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடித்து பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிலிருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இதன் மூலம், பாகிஸ்தான் பயங்கரமாதிகள் மீதான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக உலகிற்கு காட்டவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran