1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (13:31 IST)

எப்ப வேணாலும் யுத்தம் வெடிக்கலாம்? இந்தியா - பாகிஸ்தானை சமாதானப்படுத்த வருகிறது அமெரிக்கா!

Modi vs Pakistan

இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் சூழல் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு இரு நாடுகளை சமாதானம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா பல தடைகளை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக தனது வான்பரப்பை மூடிய பாகிஸ்தான் இந்தியாவிற்கும் பல தடைகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே பரபரப்பு எழுந்துள்ள நிலையில், இந்தியா போருக்கு தயாராகி வருவதாகவும், தங்களிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் பாகிஸ்தான் எச்சரிக்கும் தொனியில் பேசி வருகிறது. தொடர்ந்து இந்தியாவும் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் அது ஆசியாவின் அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறது. 

 

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K