1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 மே 2025 (09:46 IST)

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Kochi shipwrecked

கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கவிழ்ந்த நிலையில் எரிபொருள் கடலில் பரவியுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி சென்ற சரக்குக் கப்பல் ஒன்று அரபிக்கடலில் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 பேர் பயணித்த அந்த கப்பல் நேற்று இரவு மூழ்கத் தொடங்கிய நிலையில் 9 பேர் கடலில் குதித்து தப்பினர். கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணிகள் நேற்று இரவு முதலாக நடந்து வருகிறது.

 

தற்போதைய நிலவரப்படி 24 பேரில் 21 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கப்பலில் இருந்த கந்தக ரசாயனப் பொருள் முழுவதும் கடலில் கலந்துள்ளதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ரசாயன கலவை கரை ஒதுங்கும் என்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் 2 கப்பல்களும், ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன. 

 

Edit by Prasanth.K