1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 மே 2025 (15:21 IST)

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

தாஜ் மஹால் RDX வெடிகுண்டால் அழிக்கப்படும்" என்ற மின்னஞ்சல் மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படைகள் முழுவீச்சியில் ஈடுபட்டு, தாஜ் மஹாலின் சுற்றுவட்டாரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தின.
 
மின்னஞ்சல் வந்த உடனேயே சிஐஎஸ்எஃப், தாஜ் பாதுகாப்பு போலீஸ், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், சுற்றுலா போலீஸ் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் இணைந்து பெரும் சோதனையில் ஈடுபட்டனர். தாஜ் மஹாலின் கோபுரம், ஜாஸ்மின் தளம், மசூதி, தோட்டம், நடைபாதைகள் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் சோதனை நடந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
இந்த மின்னஞ்சல் உத்தரப் பிரதேச சுற்றுலா துறை மற்றும் டெல்லி காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. "மதியம் 3:30க்கு RDX வைத்து தாஜ் மஹால் வெடிக்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு பேனா உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிசிடிவி மூலம் கண்காணிக்கபட்டனர்.
 
 
மின்னஞ்சல் போலியானது என தொடக்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது சைபர் செல் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து  விசாரணை செய்து வருகிறது.
 
இந்த சம்பவம்  பதற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையான அபாயம் எதுவும் இல்லாததால் பாதுகாப்புப் படைகளுக்கு சற்று நிம்மதியைக் கொண்டுவந்தது.
 
Edited by Siva