வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (11:23 IST)

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? ரயில்வே துறை தகவல்..!

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, அதனை அடுத்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் 12ஆம் தேதியும், அதனை அடுத்து அடுத்தடுத்து பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Siva