வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (09:20 IST)

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி செங்கோட்டையில் 79வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் சாதனைகளையும், எதிர்கால இலக்குகளையும் விரிவாகப் பட்டியலிட்டார். நாட்டின் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புத் துறை எனப் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.
 
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், இந்தியா 'ஒரே தேசம், ஒரே அரசியல் அமைப்புச் சட்டம்' என்ற கொள்கையை அடைந்துவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு முக்கியச் சாதனையாக அவர் பாராட்டினார்.
 
உலகளாவிய பணப்பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ, 50% பங்களிப்பை கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு சான்றாக உள்ளது. மேலும், 'மேட் இன் இந்தியா' சிப்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்றும், இது தொழில்நுட்ப துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
 
பாதுகாப்பு துறையில் தற்சார்பு இந்தியா கொள்கையை வலியுறுத்திய பிரதமர் மோடி, நமது போர் விமானங்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஜெட் இன்ஜின்களை தயாரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது, நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Siva