வியாழன், 30 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (11:16 IST)

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!
நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
 
இன்று காலை 7 மணிக்கு, கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொது தீட்சிதர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
தேசியக் கொடியானது வெள்ளி தட்டில் வைக்கப்பட்டு, சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. கோயில் செயலர் த. சிவசுந்தர தீட்சிதர் தலைமையில், பொது தீட்சிதர்கள் மேளதாளங்கள் முழங்க தேசியக்கொடியை எடுத்து வந்து, கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றினர்.
 
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இது, கோவிலில் தேசிய உணர்வுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது.
 
Edited by Mahendran