79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது உரையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பாராட்டிய அவர், “பயங்கரவாதத்தின் மையங்களை நாங்கள் தரைமட்டமாக்கினோம். பாகிஸ்தானின் பயங்கரவாத தலைமையகங்கள் இன்று இடிபாடுகளாக கிடக்கின்றன” என்று கூறினார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும், "பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை இந்தியா பொறுத்துக்கொள்ளாது" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நமது படைகள் கற்பனை செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்தன. பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டன” என்றும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Edited by Siva