1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 மே 2025 (11:27 IST)

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் நாள்தோறும் மோசமாகி வருகிறது. நேற்று இரவு முழுக்கவும், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியதை, இந்திய ராணுவம் காலதாமதமின்றி தடுத்து, அழித்துவிட்டது. இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர் மற்றும் குவெட்டா உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
 
இந்த சூழ்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு தனது சமூக வலைதளத்தில் போட்டுள்ள கருத்து வைரலாகியுள்ளது. அதில், இந்தியா பாகிஸ்தானை கைப்பற்றும் நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் பெயர்களை வேடிக்கையான முறையில் மாற்றுவதாக பதிவிட்டுள்ளார்.
 
லாகூர் → லவ் நகர்,
இஸ்லாமாபாத் → இந்திரா நகர்,
கராச்சி → நியூ காசி,
பெஷாவர் → பேஷ்வா நகர்,
குவெட்டா → கிருஷ்ணா நகர்,
 
மேலும், பாகிஸ்தான் நாடே பவன்சுத்நாமா என மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
Edited by Mahendran