அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது கடுமையான பதட்டம் நிலவுகிறது. இந்தியாவால் "ஆபரேஷன் சிந்தூர்" எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் உள்பட விமான ஏவுகணை தளங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இந்தியாவால் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த கட்ட தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையாக இந்தியா தயாராகிவருகிறது. குறிப்பாக, இந்திய கடற்படையை சேர்ந்த 26 போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவற்றை கடலுக்குள் அனுப்ப கடற்படை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களுக்கு கடல் நடுவே செல்ல உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை வான் வழியாக மட்டும் தாக்குதல் நடத்திய இந்தியா, தற்போது கடல் வழியாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக கடற்படை முழுமையாக தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் மேலும் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாகும்.
Edited by Mahendran