வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சதம் அடித்து வருகிறது. அதேசமயம் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர பகுதிகள், தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயில் சற்று தணிவதால் மக்கள் நிம்மதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K