புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 நவம்பர் 2025 (16:16 IST)

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!
girls
பீகாரில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையான சோன்பூர் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக திரையரங்குகளில் பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தல் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் நள்ளிரவி அதிரடி சோதனை நடத்தினர்.
 
மூத்த காவல் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒரு சிறுமி உட்பட ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் மைனர்கள் என்றும், கட்டாயப்படுத்தி ஆபாச நடனமாட வைக்கப்பட்டதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.
 
சோன்பூர் கண்காட்சியில் உள்ள இரவுநேர நிகழ்ச்சிகள் ஆட்கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கனூங்கோவின் தகவலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran