வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஜூன் 2025 (17:21 IST)

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

Raja Raghuvanshi and Sonam
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சோனம் தம்பதியினர், திருமணமான பத்து நாட்களில் மேகாலயாவுக்குத் தேனிலவு சென்றனர். அங்கு சோனம் தனது காதலன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து ராஜாவை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக சோனம் மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், சோனமின் சகோதரர் கோவிந்த், ராஜாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சோனம் தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் கிட்டத்தட்டத் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட வேண்டும். என் சகோதரி சோனம் உடனான உறவை நாங்கள் முடித்துக் கொண்டோம். ராஜாவின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்," என்று தெரிவித்தார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக சோனத்திற்கும் ராஜாவிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்றும், ராஜாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க தாங்கள் அவரது குடும்பத்துடன் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் கோவிந்த் உறுதிப்படுத்தினார்.
 
Edited by Mahendran