1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 மே 2025 (10:16 IST)

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் பலி. இன்னொரு பஹல்காமுக்கு முயற்சியா?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சட்ரூ பகுதியிலுள்ள சிங்க்போரா பகுதியில் இன்று  காலை பாதுகாப்புப் படைகளுக்கும் தீவிரவாதிககளுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.
 
ஆரம்ப தகவல்களின் படி, சிங்க்போரா பகுதியில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய இராணுவம், CRPF மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் இன்னொரு பஹல்காம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரின் துல்லியமான ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கூட்டுப் படைகள் தேடுதல் நடவடிக்கையை தொடங்கின. அதன்போது பயங்கரவாதிகளுடன் நேரடி மோதல் ஏற்பட்டது.
 
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது போன்ற மோதல்களில் சிக்கிய பகுதியில் மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran