வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:45 IST)

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்
பெங்களூரு டெக் மாநாட்டில் உரையாற்றிய சுபான்ஷு சுக்லா, "விண்வெளியில் பயணம் செய்வது, பெங்களூருவின் மோசமான போக்குவரத்து நெரிசலை கடப்பதை விட மிக எளிது" என்று நகைச்சுவையாக கூறினார்.
 
மாரத்தஹள்ளியில் இருந்து மாநாட்டு இடத்திற்கு வர எடுத்த நேரம் குறித்து பேசிய அவர், 34 கி.மீ தூரத்தை கடக்க, தனது உரையின் நேரத்தைவிட மூன்று மடங்கு அதிக நேரம் ஆனதாக குறிப்பிட்டார். கடந்த ஜூலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் இவரே.
 
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, எதிர்காலத்தில் இது போன்ற தாமதங்கள் நிகழாது என்று பதிலளித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ள சுரங்கப்பாதை சாலை திட்டப் பின்னணியில் சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
 
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. 2024இல் 54 நிமிடங்களாக இருந்த சராசரி பயண நேரம், இப்போது 63 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான புதிய தனியார் வாகனங்கள் சாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. 
 
Edited by Siva