வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 246 புள்ளிகள் சரிந்து, 84,236 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 71 புள்ளிகள் குறைந்து, 25,802 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் லீவர், ஜியோ பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இண்டிகோ, இன்போசிஸ், ஐ.டி.சி., டாட்டா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகளின் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva