பேரன் லிங்காவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!.. ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு மகன்கள் இருந்த நிலையில் 17 வருடங்களுக்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
கடந்த 2 வருடங்களாகவே தனுசும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரவிருக்கிறார்கள்... வீட்டில் பெரியவர்கள் பேசி வருகிறார்கள்.. என்றெல்லாம் செய்திகள் தொடர்ந்து வெளியானதே தவிர தனுசும், ஐஸ்வர்யாவும் சேரவில்லை.. அதேநேரம் மகன்கள் தொடர்பான பள்ளி நிகழ்ச்சிகளில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டனர். அதேபோல், ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவரின் குடும்பத்தோடு தனுஷும் சென்று படம் பார்ப்பதும் வழக்கம்..
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய உறவினரான அனிருத்தின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் அங்கு மகன் லிங்காவுடன் தனது தந்தை ரஜினிகாந்த் நடந்து வரும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.