திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (17:01 IST)

முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம்.! யாரைப் பற்றி சொல்கிறார் ஜெயக்குமார்.!!

jayakumar
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  
 
சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  அண்ணாவின் பெயரை சொல்வதற்கு திமுக-விற்கு எந்த தகுதியும் இல்லை என்றார். தேர்தல் நெருங்கக் கூடிய சூழலில் ஏற்கனவே அனைத்து பணிகளும் பொதுச் செயலாளர் தலைமையில் இளைஞர் அணி பாசனை பிரச்சாரக் குழு தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன என்றும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் தேர்தல் வர ஒரு மாதமே உள்ள சூழலில் விரைவில் கூட்டணி குறித்து அறிவித்து வெளியிடப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை
தொடங்கி இருப்பதற்கு காரணம் அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறிவிடும் என்ற பயம் தான் என்று அவர் விமர்சித்தார்.

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த ஜெயக்குமார்,  எங்களைப் பொறுத்தவரை முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம் என்றும் கூறினார்.