1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Trump Praises Jensen Huang's Reinstatement as Nvidia CEO While National Security Probe Continues

என்விடியா நிறுவனத்தின் சி.இ.ஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங்.. டிரம்ப், எலான் மஸ்க் வரவேற்பு..

ஜென்சன் ஹுவாங்
என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்க அந்நிறுவன வாரியம் எடுத்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகச்சிறந்த முடிவு என பாராட்டியுள்ளார். 
 
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்த நடவடிக்கையை வரவேற்று, தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது எனக் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த திடீர் மறுநியமனம் குறித்து ஜனநாயக கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
சீன உளவு விவகாரம் தொடர்பான சர்ச்சை மற்றும் ஆலிஸ் ஹுவாங் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங்கின் பதவி விலகலும் அதை தொடர்ந்த சர்ச்சைகளும் ஏற்பட்டன. 
 
இருப்பினும், சட்டவிரோத செயல்களுக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. சுயாதீன குழு மூலம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்விடியா அறிவித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையா? வீட்டை காப்பாற்ற உதவும் தமிழக அரசு...