1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. crpf gathered in thiruparankundram temple

மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு!.. திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

crpf
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று மாலை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இதுபற்றி முறையிட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஒருபக்கம், தற்போது சி.ஆர்.பி.எப் வீரர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்றும் இடத்தையும் பார்வையிட்டனர்.

ஒருபக்கம் தமிழக காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் கோயில் மலை அடிவாரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்கள் ஆதார அடையாள அட்டைகளை சரிபார்த்த பிறகு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...