1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Introduces Internet Tamil Semmal Award with Rs 25,000 Prize for Digital Tamil Contributors

இணையத்தில் நன்றாக எழுதுபவர்களுக்கு விருது மற்றும் ரூ.25000 பரிசு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்...

vijay
இணையம், கணினி மற்றும் கைபேசி தளங்களில் தமிழ் மொழியை வளப்படுத்தும் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், 'இணையத் தமிழ்ச் செம்மல்' என்ற புதிய விருதை வழங்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
ஆண்டுதோறும் மின்னணு தளங்களில் சிறப்பாக செயல்படும் 2 அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.25,000 பரிசுத்தொகை மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இதற்காக 2027-2028 நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.50,000 தொடர் செலவினமாக ஒதுக்கப்படும். பிழையின்றி எழுதுபவர்கள், கலைச்சொற்களை உருவாக்குபவர்கள், தமிழ் வளங்களை பெருக்குபவர்கள் மற்றும் இணையத்தமிழ் குழுக்களை வழிநடத்துபவர்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
 
விருதாளர்களைத் தேர்வு செய்ய அமைச்சர் தலைமையில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முனைவர் இளங்கோவன், வெங்கடரங்கன், நரசிம்மன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்; உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தன் விவரக் குறிப்பு அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
 
டிஜிட்டல் உலகில் தமிழை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் அளித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கோவை மக்களுக்கு சூப்பர் செய்தி.. சிறுவாணி அணை நீர்க்கசிவை ரூ.18 கோடி.. அதிரடி அரசாணை...