1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Announces One-Time Loan Settlement Scheme with Interest Waivers for Cooperative Housing Borrowers

கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையா? வீட்டை காப்பாற்ற உதவும் தமிழக அரசு...

கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை கட்ட முடியாமல் தவிக்கும் உறுப்பினர்களுக்காக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 31.03.2026-க்கு முன்னர் தவணை தவறிய, தமிழ்நாட்டிலுள்ள சுமார் 24,301 உறுப்பினர்கள் (நிலுவைத் தொகை சுமார் ரூ.776.42 கோடி) இத்திட்டத்தால் பயனடைவர்.
 
அபராத வட்டி, டிகிரி வட்டி மற்றும் தவணை தவறிய கடன்களுக்கான EMI வட்டி ஆகியவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மேலும், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு கூடுதலாக 1 விழுக்காடு வட்டி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நிலுவை தொகையை ஒரே தவணையில் முழுமையாக செலுத்த வேண்டும், நீதிமன்ற வழக்குகள் இருந்தால் வாபஸ் பெற வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் ஜப்தி மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டு தங்கள் வீட்டை பாதுகாத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த ரூ.776 கோடிக்கு மேலான தொகை வசூலாகிச் சங்கங்களின் நிதி நிலை வலுப்படும்; நீதிமன்ற வழக்குகளும் குறையும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருப்பரங்குன்றம் தீபம்.. 5600 போலீசார் பாதுகாப்பு.. பணியில் 12 எஸ்.பி, 8 ஏ.டி.எஸ்.பி, 50-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி...