1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. russia president putin impressed with indian student

AI தொடர்பான கேள்வி!.. புதினை அசரவைத்த இந்திய சிறுவன்....

putin
சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI தற்போது பல துறைகளிலும் நுழைந்து விட்டது. இல்லாத ஒன்றைக் கூட புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் உருவாக்கி சமூகவலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.

ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. AI கற்றுக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் சாப்ட்வேர் துறையில் வேலையே கிடைக்காது என்கிற நிலை இளைஞர்களுக்கும் உருவாகியிருக்கிறது. ஒருபக்கம் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்கள் பலரும் தங்களை வேலைகளை இழப்பார்கள் என பலரும் கூறி வருகிறார்கள் மற்றொரு பக்கம் வந்து விட்டன..

இந்நிலையில்தான், AI செயற்கை நுண்ணறிவை நம்பி நாம் சிந்திப்பதை நிறுத்தி விடுவோமா என ரஷ்ய அதிபர் புதின் எழுப்பிய கேள்விக்கு 16 இந்திய சிறுவன் ராகுல் ஜான் அஜூ அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற AI Journey 2026 மாநாட்டில் ‘AI முழுமையாக சார்ந்திருப்பது சுயமாக சிந்திக்கும் திறனை பாதிக்காதா?’ என புதின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராகுல் ஜான் ‘ AI முழுமையாக சார்ந்திருக்காமல் அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று ரவுல் பதிலளித்தது கேட்டு புதின் பாராட்டினார். மேலும், ராகுலின் தொழில்நுட்ப பங்களிப்பு பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும்’ எனக் குறிப்பிட்டார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தூணில் தீபம் ஏற்றுவது ஆட்சியரின் பணி அல்ல.. உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர்