திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (15:27 IST)

ஆர்டர் செய்த 15 நிமிடங்களில் டெலிவரி.. அடுத்தகட்ட ப்ளானில் Amazon! - Zeptoவுக்கு போட்டியா?

Amazon Tez

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அடுத்து முக்கிய நகரங்களில் 15 நிமிட டெலிவரி சேவையை தொடங்க உள்ளது.

 

 

அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் ஆன்லைன் பொருட்கள் ஆர்டர் மற்றும் டெலிவரியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவிலும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ப்ரைம் வீடியோ, ஆடியோ புக், கிண்டில் என பல்வேறு சேவைகளை வழங்கி வரும் அமேசான் பணப்பரிவர்த்தனைக்கு Amazon Pay உள்ளிட்ட வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.

 

தற்போது அமேசான் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் Amazon Tez சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பிக் பாஸ்கெட், ஸெப்டோ போன்ற செயலிகள் முக்கிய நகரங்களில் ஆர்டர் செய்த சில நிமிடங்களில் வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் வசதியை வழங்கி வருகின்றன.

 

தற்போது அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த அமேசான் டெஸ் சந்தையில் நுழைய உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிமுகமாகும் அமேசான் டெஸ் பின்னர் பல நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.

 

Edit by Prasanth.K