1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Apple iPad Mini 8 Expected with A20 Pro Chipset and OLED Display

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபேட் மினி 8.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

ஆப்பிள் ஐபேட் மினி 8
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய 'ஐபேட் மினி 8'  சாதனத்தை விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இதில் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்த கசிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
பலரும் எதிர்பார்த்தது போல 120Hz ProMotion டிஸ்ப்ளேவிற்கு பதிலாக, இந்த புதிய டேப்லெட் 60Hz LTPS OLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கருப்பு நிறமும், சிறந்த கான்ட்ராஸ்ட் விகிதமும் கிடைத்து அருமையான காட்சி அனுபவம் கிடைக்கும் என்றாலும், எதிர்பார்த்த ஸ்மூத் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்காமல் போகலாம்.
 
செயல்திறனை பொறுத்தவரை, இந்த ஐபேட் மினி சக்திவாய்ந்த A20 Pro சிப்செட் மூலம் இயக்கப்படவுள்ளது. மேலும், லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் வீடியோ கால் செய்ய ஏதுவாக முன் கேமராவின் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 
 
மேம்பட்ட ஸ்பீக்கர்கள், வாட்டர் ரெசிஸ்டன்ட் வடிவமைப்பு மற்றும் புதிய 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' அம்சங்களும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அக்டோபரில் நடைபெறவுள்ள ஆப்பிள் நிகழ்வுகளில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என டெக் உலகினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சவுதி அரேபியா விமான நிலையத்தில் கடும் தாக்குதல்.. 12 பேர் பலி.. ஹூதி அமைப்பினரின் சதியா?