1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Apple May Skip iPhone 19 to Launch Anniversary Special iPhone 20 in 2027

ஐபோன் 18ஐ தொடர்ந்து டைரக்டா ஐபோன் 20 தான்.. ஐபோன் 19ஐ தவிர்த்தது ஏன்?

iphone 17
ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கமான ஐபோன் வெளியீட்டு முறையை மாற்றி அமைத்து, புதிய திட்டமிடலை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள், அடுத்ததாக 'ஐபோன் 19' தொடரை முற்றிலும் தவிர்த்துவிட்டு direct-ஆக 'ஐபோன் 20' மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
 
2007-ல் வெளியான முதலாவது ஐபோனின் 20-வது ஆண்டு நிறைவை 2027-ல் சிறப்பிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாதாரண ஐபோன் 18, மலிவு விலை ஐபோன் 18e மற்றும் இரண்டாம் தலைமுறை ஐபோன் ஏர் ஆகியவை அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் மற்றும் சிப் விநியோகத்தில் நிலவும் பற்றாக்குறையே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
 
2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகவுள்ள 'ஐபோன் 20', முற்றிலும் புதிய கிளாஸ் டிசைன், வளைந்த விளிம்புகள் மற்றும் பஞ்ச்-ஹோல் இல்லாத திரையுடன் வெளியாகும் எனப் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டைனமிக் ஐலேண்ட் அளவைக் குறைத்து, புதிய சாலிட்-ஸ்டேட் பட்டன்களை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கஞ்சா விற்பதில் தகராறு!.. வீட்டின் முன்பே இளைஞர் வெட்டிக்கொலை!.. சென்னையில் பயங்கரம்!..