1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay going to trichy for hospital

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

cm vijay
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து விட்டது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறிவிட்டார்.

தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. ஒருபக்கம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெகவின் செயல்பாடுகளையும், முதல்வர் ஜோசப் விஜயையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜய் தனது செயல்பாடுகள் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்..

இந்நிலையில்தன், வருகிற வெள்ளிக்கிழமை ஜோசப் விஜய் திருச்சி செல்லவிருக்கிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 110 கோடி மதிப்பில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை விஜய் திறந்துவைக்கவிருக்கிறார். மேலும் திருச்சியில் நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கவிருக்கிறார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதன்பின் அந்த தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். விரைவில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் விஜய் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...