1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 16 Special MEMU Trains Announced for Tiruvannamalai Deepam Festival From Nov 23 to 25

கார்த்திகை தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்...

train
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 16 சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை, தாம்பரம், காட்பாடி, விழுப்புரம் மற்றும் வேலூர் கான்ட் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 
சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில் (06143) காலை 11.40 மணிக்குத் திருவண்ணாமலை வந்தடையும்; மறுமார்க்கத்தில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும். 
 
தாம்பரத்திலிருந்து காலை 9.15 மணிக்குக் கிளம்பும் ரயில் (06093) திருக்கோயிலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று பகல் 1.30 மணிக்குச் சென்றடையும்.
 
காட்பாடி - திருவண்ணாமலை இடையே (06145, 06146, 06147, 06148), விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே (06095, 06096, 06097, 06098, 06129, 06130) மற்றும் விழுப்புரம் - வேலூர் கான்ட் இடையே (06061, 06062) பல்வேறு நேரங்களில் மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
 
திருவிழா கூட்ட நெரிசலை குறைத்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் எளிதாகப் பயணிக்க இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் பெரிதும் உதவும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்கள்.. கசிய விட்ட 15 பேர் பணிநீக்கம்...