1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. man cheated women on second marriage

AI போட்டோக்களை அனுப்பி ஏமாற்றை பெண்ணிடம் மோசடி!.. சென்னை நபர் கைது!...

second marriage
கணவனைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களிடமும், அதேபோல், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களையும் குறி வைத்து ஒரு கும்பல் தொடர்ந்து மோசடி செய்து வருகிறது. இது தொடர்பாக பலரும் பலமுறை கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

மதுரையில் திருமணமாகி குழந்தையோடு இருக்கும் ஒரு பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அவர்  இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஒரு இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளார். அப்போது அவரை ராஜுவ் என்பவர் தொடர்பு கொண்டு ‘நானும் மனைவியை பிரிந்து வாழ்கிறேன்.. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என ஆசைவார்த்தை பேசியிருக்கிறார். அதோடு தான் ஒரு பெரிய நிறுவனத்தில் ஹெச்.ஆர் பணியில் இருப்பதாகவும் மாத சம்பளம் ரூ.85 ஆயிரம் எனவும் கூறியிருக்கிறார்..

மேலும் நட்சத்திர ஹோட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் தான் நிற்கும் போட்டோக்களை அந்த பெண்ணுக்கு அனுப்பி நம்ப வைத்திருக்கிறார். நேரில் சந்திக்கும்படி அந்த பெண் கேட்டுள்ளார். உண்மையில், ராஜூவுக்கு வயது 35. ஆனால் வயதை குறைவாக சொல்லியதோடு, AI மூலம் பல போலியான புகைப்படங்களை உருவாக்கி அந்த பொண்ணுக்கு அனுப்பி நம்ப வைத்திருக்கிறார். அதோடு அந்த பெண்ணை நேரில் சந்தித்து சென்றபோதும் தலையில் விக் வைத்து சென்றுள்ளார்.

அப்போது, நட்சத்திர விடுதியில் அந்த பெண்ணுடன் ராஜு நெருக்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின், விரைவில் ‘நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. வேகமாக உன் கணவரிடமிருந்து நீ விவாகரத்து வாங்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய செலவாகும்’ என்று அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை அந்த பெண் ராஜுவிடம் கொடுத்துள்ளார். அதன்பின் சில நாட்கள் மட்டுமே அந்த பெண்ணிடம் தொலைபேசியில் ராஜீவ் பேசி வந்திருக்கிறார். அதன்பின் அந்த பெண்ணால் ராஜூவை தொடர்பு கொள்ள முடியவில்லை..

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ராஜூவின் வீட்டுக்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது. தலையில் வழுக்கை தலையோடு திருமணமாகி குழந்தைகளுடன் அங்கு அவர் வசித்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை நிறுத்தியது டிவிஎஸ்.. நான்கு மாதங்களில் வெறும் 49 மட்டுமே விற்பனை