என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!
திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொண்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அதையடுத்து அடுக்கடுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய ரொமாண்டிக் வீடியோக்களைப் பகிர்ந்தார். ஆனால் இது எதற்கும் பதில் சொல்லாமல் மௌனம் காத்துவந்தார் ரங்கராஜ். இதற்கிடையில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது சம்மந்தமாக சென்னைக் குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. ஜாயின் குற்றச்சாட்டு சம்மந்தமாக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் தான் DNA சோதனைக்குத் தயார் என்றும் அதில் குழந்தைக்குத் தான்தான் தந்தை என உறுதியானால் குழந்தை வளர்ப்பிற்கான செலவுகளை ஏற்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது ஜாய் “என் கணவரை யாராவது பார்த்தால் அவரை DNA சோதனைக்கு வர சொல்லுங்கள். அது சம்மந்தமாக அறிக்கை வெளியிட்டு 15 நாட்கள் ஆகிறது. இப்போது எங்கே தலைமறைவாக உள்ளார். தைரியமும் நேர்மையும் இருந்தா தயவு செஞ்சு டெஸ்ட்டுக்கு வாங்கக் கணவரே” எனக் கூறியுள்ளார்.