1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Govt Sets Up 30 Siddha and Yoga Fertility Centers Across State

குழந்தை இல்லையா? இனி லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்... தமிழக அரசின் இயற்கை கருத்தரிப்பு மையங்கள்...

கருத்தரிப்பு சிகிச்சை மையம்
குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில் 25 சித்தா மருத்துவர்கள், 5 யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்கள், 30 நர்சிங் தெரபிஸ்டுகள் பணியமர்த்தப்பட உள்ளனர். கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சித்தா மையங்களும், சென்னை, தேனி, திருவாரூர், நாமக்கல், நீலகிரி ஆகிய இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்களும் தொடங்கப்பட உள்ளன.
 
தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்ய முடியாத ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, இயற்கை முறை சிகிச்சை, உணவு மற்றும் வாழ்வியல் ஆலோசனைகள் இதன் மூலம் கிடைக்கும். மகப்பேறு மற்றும் தாய்சேய் பராமரிப்புப் பிரிவுடன் இவை இணைந்து செயல்படுவதால், கருத்தரிப்பு முதல் பாதுகாப்பான பிரசவம் வரை ஒரே இடத்தில் சிகிச்சை பெற முடியும். ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த முன்னோடி முயற்சி, பல குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்துடன் இணைப்பு.. இனி மக்களுக்கு டபுள் ஜாக்பாட்...