சேகர்பாபு மீது வழக்குப்பதிவு! - ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே!..
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் திமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இரண்டு எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் ஒருவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அதேபோல் முதலமைச்சர் விஜயை அசிங்கமாக பேசியதற்காக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் வரை போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். மேலும், சமீபத்தில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு சான்றிதழ் கொடுப்பதில் பல நூறு கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீரசாமி உள்ளிட்ட 10 பேர் மீது இரண்டு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.