1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt Announces Distribution of Free Dhotis and Sarees for Pensioners Ahead of Diwali

இன்று முதல் இலவச வேட்டி மற்றும் சேலைகள்... ரேசன் கடைகளில் பெற்று கொள்ளலாம்.. தமிழக அரசு..

தீபாவளி இலவச வேட்டி சேலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இன்று  முதல் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடைபவர்களுக்கு நியாய விலைக் கடைகள்  மூலம் இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, 2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் முழுமையாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் ஓய்வூதியக் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப அட்டையுடன் நேரில் சென்று, வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குள் தங்களுக்குரிய இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த விநியோகப் பணிகள் எவ்வித தாமதமும் இன்றி தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியாய விலைக் கடைகளின் நகர்வு மற்றும் விநியோகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அரசின் இந்த அறிவிப்பு முதியோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
254 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி